Breaking News
Home / இலங்கை / அடிக்கடி வெல்டி அடிக்கும் மைத்திரியால் ரணிலுக்கு தொடரும் ஏமாற்றம்!

அடிக்கடி வெல்டி அடிக்கும் மைத்திரியால் ரணிலுக்கு தொடரும் ஏமாற்றம்!

மைத்திரி – மஹிந்த அரசாங்கத்தின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இன்று (16.11.2018) முற்பகல் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பில் இரு தரப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்‌சவை ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன அவசரமாக அழைத்து, இன்று காலை முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த பேச்சுவார்த்தைகளின்போது, நேற்றைய தினம் கட்சித் தலைவர்களிடம் பேசிய விடயங்கள் குறித்து மஹிந்த ராஜபக்‌ஷவிடம் விளக்கியுள்ளார்.

இதன்படி அரசியலமைப்பின்படியே எல்லாம் நடக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியதாகவும் பிரதமர் பதவியை ரணிலுக்கு வழங்க முடியாதென்பதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும் மஹிந்தவிடம் விளக்கிக் கூறியுள்ளார்.

பிரதமர் கடமைகளை தொடருமாறும் மஹிந்தவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் நேற்றைய தினம் தம்மைச் சந்தித்த மைத்திரி, நாளைய தினம் மீண்டும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிபந்தனைகளுடன் நடத்துமாறும் அதனை தான் ஏற்றுக்கொள்வதாக கட்சித் தலைவர்களிடம் நேற்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் மைத்திரியின் இந்த திடீர் மாற்றம் அதிர்வலையை மீண்டும் தோற்றுவித்துள்ளது.

Check Also

திடீரென வீங்கிய இளம் பெண்ணின் உடல் காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க

இங்கிலாந்தின் எசெக்ஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தமது வயிறு திடீரென்று வீங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவரை சந்தித்த அவர் ஆண் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *