Breaking News
Home / இலங்கை / அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரானஇடைக்காலத் தடை

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரானஇடைக்காலத் தடை

ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான உயர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டடிருந்த இடைக்காலத் தடை எத்தரவு நாளை மறுதினம் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி கடந்த மாதம் 12ஆம் திகதி, 13 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன..

பிரதம நீதியரசர் நளின் பெரேராஇ பிரியந்த ஜயவர்தன பிரசன்ன ஜயவர்தன ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தன. இதன் போது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை அன்று 7 ஆம் திகதி வரை வித்த்திருந்தது. அன்றைய தினம் உயர் நீதி மன்றம் தீர்மானித்த படி கடந்த 4ஆம் திகதி முதல் விசாரணைகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது..

பிரதிவாதிகளின் கோரிக்கைக்கு அமைவாக 7 நீதியரசர்கள் அடங்கிய குழாமால் இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவும் நாளை மறுதினம் வரை நீடிக்கக்கட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

லண்டனில் ஆண்களுக்கு உடலை விருந்தாக்கிய பெண் கூறும் காரணம்

லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் இறங்கியதாக மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார். பிரித்தானியாவின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *