Breaking News
Home / இலங்கை / அதிவேகம் யாழ் இளைஞனின் உயிரைப் பறித்தது..!

அதிவேகம் யாழ் இளைஞனின் உயிரைப் பறித்தது..!

அதிவேகத்துடன் வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

மற்றொரு இளைஞர் கவலைக்கிடமான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தன அதிவேகத்துடன் வந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

மற்றொரு இளைஞர் கவலைக்கிடமான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் யாழ்.தென்மராட்சி ஏ 35 வீதியில் நாவற்குழி மகாவித்தியாலயத்துக்கு அருகாமையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – மன்னார் வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் இருவர் பயணித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக மின் கம்பத்துடன் மோதியுள்ளது.

சம்பவத்தில் கட்டப்பிராயைச் சேர்ந்த 23 வயதுடைய விஜயரத்தினம் பிரசாத் என்ற இளைஞர் உயிரிழந்தார். அதே இடத்தைச் சேர்ந்த 27 வயதுடைய குணராசன் திருக்குமரன் என்ற இளைஞர் கவலைக்கிடமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Check Also

முள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இராணுவத்தினர் !

முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *