Breaking News
Home / உலகம் / அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு..

அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு..

சிங்கப்பூர் செண்டோசா தீவில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் சந்தித்தனர்.

வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.

இதற்கிடையே, டிரம்ப் – கிம் சந்திப்பு சிங்கப்பூரில் 12-ம் தேதி நடைபெறும் என்றும், இவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்நிலையில், சந்திப்பு நடக்கவுள்ள ஓட்டலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் சென்றடைந்தார். அவரை சந்திக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

இதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்தனர். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர்.

Check Also

பொட்டு அம்மான் பத்திரமாக உள்ளார்! புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர் அன்றே அடித்துச் சொன்னார்

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என பா.ஜ.கவின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்த கருத்தால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *