Breaking News
Home / உலகம் / அழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்! சர்ச்சையான பேஷன் ஷோ! (படங்கள்)

அழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்! சர்ச்சையான பேஷன் ஷோ! (படங்கள்)

“பேஷன் வீக்” என்ற பெயரில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இந்து மதத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை பிரபல நீச்சல் உடை தயாரிப்பு நிறுவனமான லிசா புளூ ஏற்பாடு செய்துள்ளது.

அப்போது அந்த நிறுவனத்தின் புதிய நீச்சல் உடைகளை அழகிகள் அணிந்து கொண்டு நடந்து வந்தனர்.

அதில் ஒரு பெண்ணின் உடையில் மட்டும் இந்து கடவுளான லட்சுமியின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து  இந்து கடவுளின் படம் பதித்த உள்ளாடைகளின் விளம்பரம், விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி இந்து அமைப்புகள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அவுஸ்திரேலிய கொடிகளை எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து லிசா புளூ நிறுவனம் மன்னிப்பு கேட்டதுடன் இந்து கடவுள் படம் பதிந்த உள்ளாடைகள் விற்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

Photo Source : dailymail.co.uk

Check Also

சுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் தமிழ்ப் பெண் தற்கொலை!

சுவிஸர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டல் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில்தற்கொலை செய்ய முயற்சித்த பெண் இன்று உயிரிழந்துள்ளார். கடந்த செவ்வாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *