Breaking News
Home / கிசு கிசு / ஆபாச பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து கமலை கைது செய்யுமாறு தொலைக்காட்சி அலுவலகம் முற்றுகை..!

ஆபாச பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து கமலை கைது செய்யுமாறு தொலைக்காட்சி அலுவலகம் முற்றுகை..!

தமிழில் ஒளிபரப்பாகிவரும் ”பிக்பாஸ்” நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி, விஜய் டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் வியாழக்கிழமை (இன்று) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதாவது, விஜய் டிவி-யில் கடந்த வருடம் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 2 கடந்த ஜூன் 17 -ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் இரண்டாவது முறையாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி கலாசாரத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் நிகழ்ச்சியாக உள்ளதாகவும், இதனால் குழந்தைகள் தவறான பாதைக்கு செல்ல வழிவகுப்பதாகவும் கூறி, சென்னையில் உள்ள விஜய் டிவி அலுவலகத்தை இந்து மக்கள் கட்சியினர் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், இவர்கள் விஜய் டிவியை தடை செய்ய வலியுறுத்தியும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து, இப் போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து விஜய் டிவி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

தேவையானால், அமைச்சர் பதவியை கைவிட தயார்

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம, புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை பெறப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *