Breaking News
Home / சினிமா / ஆர்யாவை இனி திருமணம் செய்ய மாட்டேன்… சுசானா, அகாதா வெளியிட்ட அதிர்ச்சிக் காட்சி

ஆர்யாவை இனி திருமணம் செய்ய மாட்டேன்… சுசானா, அகாதா வெளியிட்ட அதிர்ச்சிக் காட்சி

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது.

இந்நிகழ்ச்சியின் முடிவு போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் திருப்தி இல்லை என்று தான் கூற வேண்டும்.

ஆரம்பத்தில் 16 பெண்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பெண்ணையே ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

கடைசியாக இருந்த சுசானா, அகாதா, சீதாலட்சுமி இவர்களில் யாரையும் ஆர்யா திருமணம் செய்துகொள்ள முடிவு எடுக்கவில்லை. தனக்கு கால அவகாசம் வேண்டும் என்று கூறி நிகழ்ச்சியினை நிறைவு செய்தனர்.

இந்நிலையில் சுசானா வெளியிட்ட காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. இதில் ஆர்யாவை இனி திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.

இதோ போன்று அகாதாவும் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் “வேணாம் வலிக்குது போதும் விட்டுடு“ என்ற பாடலுக்கு தனது மனதில் இருந்த ரியாக்ஷனை வெளிப்படுத்துள்ளார். மேலும் இக்காட்சியில் அவரது அப்பாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Check Also

மகாபாரதம் படத்தில் இணையும் சல்மான்கான்

ரூ.1,000 கோடி செலவில் இந்தியில் படமாக எடுக்கப்படவுள்ள மகாபாரதம் கதையில் சல்மான்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஏற்கனவே இப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *