Breaking News
Home / ஆன்மீகம் / இன்று இந்த ராசிக்காரங்க செம்ம அதிர்ஷ்டக்காரங்களாம்!

இன்று இந்த ராசிக்காரங்க செம்ம அதிர்ஷ்டக்காரங்களாம்!

மேஷம்

சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

ரிஷபம்

பதவி வாய்ப்புகள் பரிசீலனையில் இருக்கும் நாள். வெளிநாட்டுத் தொடர்பு நன்மை தரும். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சிக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம்.

மிதுனம்

அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். விரயங்கள்அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசிப்பது நல்லது. குடும்பத்தில் வீணான குழப்பம் தோன்றி மறையும்.

கடகம்

சந்தோ‌ஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். கொடுக்கல் – வாங்கல்கள் ஒழுங்காகும். பொருளாதார பற்றாக்குறை அகலும். உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன்கருதி சேமிப்பீர்கள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பழைய வாகனங்களை மாற்றிப் புதிய வாகனங்கள் வாங்க திட்டம் தீட்டுவீர்கள்.

கன்னி

அன்பு நண்பர்களின் சந்திப்பால் ஆனந்தம் பெருகும் நாள். இழுபறியான வழக்குகளில் வெற்றி கிட்டும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சு முடிவாகும். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

துலாம்

காரிய வெற்றி ஏற்படும் நாள். கடமை உணர்வோடு செயல்படுவீர்கள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை நாடி வரும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டு. வங்கிச் சேமிப்பு உயரும்.

விருச்சகம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். வரவு திருப்தி தரும்.

தனுசு

ஆதாயம் அதிகரிக்கும் நாள். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். சுபவிரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் ஏற்படலாம்.

மகரம்

பணவரவு திருப்தி தரும் நாள். பாசம் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிபடுத்திக் கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

கும்பம்

சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதிக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.

மீனம்

மகிழ்ச்சி கூடும் நாள். முன்னோர் சொத்துக்களில் லாபம் கிடைத்து மகிழ்வீர்கள். எதிர்பார்ப்புகள் மாலையில் நிறைவேறும். தொழிலில் தோன்றிய கடுமையான எதிர்ப்புகள் கூட கடைசியில் சாதமாக முடிவடையும்.

Check Also

இன்றைய அதிஷ்டசாலி நீங்களா?… இதோ உங்களது ராசிபலன்

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *