Breaking News
Home / இலங்கை / இரவு பல இடங்களில் கடும் மழை பெய்யும் : மக்களுக்கு எச்சரிக்கை

இரவு பல இடங்களில் கடும் மழை பெய்யும் : மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்றும் மேல் மாகாணம் மற்றும் தென் கரையோரப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் இன்று மதியத்தில் இருந்து மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Check Also

இலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..?

போதைபொருள் கடத்தலின் மத்திய நிலையமாக இலங்கை பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் இலங்கையின் வடகிழக்கு உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *