Breaking News
Home / இலங்கை / முள்ளிவாய்க்கால் கடற்படையினரின் பகுதியில் போலி மனிதக் கால்கள்..!

முள்ளிவாய்க்கால் கடற்படையினரின் பகுதியில் போலி மனிதக் கால்கள்..!

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் செயற்கை மனித கால் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் தற்காலிக மருத்துவமனை ஒன்று இயங்கிய பகுதியிலேயே குறித்த செயற்கைக்கால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினர் வட்டுவாகல் பகுதியை கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் பொதுமக்களின் காணிகள் உள்ளிட்ட 657 ஏக்கர் நிலங்களில் கடற்படையினர் பாரிய முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.

இந்நிலையில், 2009 இல் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் 2012 இல் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீள்குடியேறிய மக்களின் குடிமனை பகுதிக்கு எதிர்ப்பக்கம் பல வருடங்களாக கடற்படையினரின் கண்காணிப்பில் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடற்படையிரனின் கண்காணிப்பு பகுதிக்கு செல்வதை தவிர்த்துள்ளனர்.

இந்த நிலையில் 9 வருடங்களாக அந்தப்பகுதி மனித நடமாட்டம் அற்றபகுதியாக காணப்படுகின்றது, இவ்வாறான சூழ்நிலையில் விடுதலை போராளி ஒருவரின் செயற்கை கால் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

முள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இராணுவத்தினர் !

முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *