Breaking News
Home / பிரித்தானியா / இளவரசர் திருமணம்: பிரித்தானியாவில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இளவரசர் திருமணம்: பிரித்தானியாவில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரித்தானிய இளவரசர் ஹரி(33) மற்றும் அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கலின்(36) திருமணத்தை முன்னிட்டு வின்ஸ்டர் கோட்டையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.

வரும் மே மாதம் 19ம் திகதி வின்ஸ்டர் கோட்டையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் இளவரசர் ஹரியும் மேகன் மெர்க்கலும் கரம் கோர்க்க உள்ள நிலையில் இவர்களது திருமண ஏற்பாடுகள் வெகுஜோராக நடைபெற்று வருகிறது.

பிரித்தானிய ராஜ குடும்பத்தின் திருமண வைபவத்தை கண்டுகளிக்க ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆகவே பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுக்கும் விதமாக வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வதுடன் ரோந்து நடவடிக்கையையும் பொலிஸார் துரிதப்படுத்தி உள்ளனர்.

இதற்காக தேம்ஸ் பள்ளத்தாக்கில் வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்ப நாய்களுடன் வரலாறு காணாத அளவில் பொலிஸார் நேற்று தீவிர பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்ட தொடங்கியுள்ளனர்.

மேலும் பொது இடங்கள் கட்டிடங்கள் மற்றும் கடைகளில் எதிர்வரும் நாட்களில் இந்த மாதிரி சோதனைகள் அதிகளவு நடத்தப்படுமென பொலிஸார் கூறியுள்ளனர்.

மோப்ப நாய்களின் துணையுடன் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வெடிக்கும் வகையிலான உபகரணங்களின் அறிகுறிகள் எங்கும் உள்ளதா என தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.

தற்போதைய சூழலில் பிரித்தானியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது, எனவே ராஜ குடும்பத்தின் திருமணம் என்பதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க இதுவரை இல்லாத அளவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருமண தினத்தன்று தெருக்களில் குழுமியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களில் யார் தீவிரவாதி என அடையாளம் காண்பது சிரமம், எனவே இப்போது இருந்தே பாதுகாப்பு நடவடிக்கையை எச்சரிக்கையுடன் மேற்கொள்வது அவசியமாகிறது என பொலிசின் தலைமை கண்காணிப்பாளர் ஜான் கொககான் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Check Also

பிரித்தானியாவில் ஈழத்து பெண் அனுபவித்த கொடுமைகள்!

பிரித்தானியாவில் தனது பாடசாலை காலகட்டத்தில் மிக மோசமாக கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானேன் என தமிழ் பெண் ஒருவர் தமது குமுறலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *