கொழும்பு: உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மமதையில் ஈழப் பிராந்தியத்தின் எல்லை மிகவும் சுருங்கிவிட்டது என கிண்டலடித்துள்ளார் மகிந்த ராஜபக்சே.
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து இலங்கை அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
ராஜபக்சே வியூகம்
இலங்கை அரசியலில் ராஜபக்சேவின் கை ஓங்குவதால் பிரதமர் ரணில், அதிபர் மைத்ரிபால சிறிசேன கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறிலங்கா சுதந்திர கட்சியைக் கைப்பற்றுவதற்கும் மகிந்த வியூகம் வகுத்து வருகிறார்.