Breaking News
Home / இலங்கை / உறுதியான நிலைப்பாட்டில் உள்ள மைத்திரி; அதிர்ச்சியில் ரணில்..

உறுதியான நிலைப்பாட்டில் உள்ள மைத்திரி; அதிர்ச்சியில் ரணில்..

சிறிலங்கா நாடாளுமன்றில் இன்றைய தினம் இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனஇ தான் நேற்றைய தினம் குறிப்பிட்டது போல் முறையான வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.

அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஒருமுறை பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக குறிப்பிட்டதாக மஹிந்த ராஜபக்சவின் கட்சியான சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் 24 மணி நேரங்களுக்குள் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பான அறிவிப்பு ஜனாதிபதியிடம் இருந்து வரும் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற வன்முறைகளை அடுத்து இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு காலிமுகத்திடலுக்கு எதிரில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தாமரை மொட்டுக் கட்சியென அழைக்கப்படும் பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தக் இந்தக் கலந்துரையாடலில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டிருக்கவில்லை.

எனினும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்த நிலையில் அவர்கள் முன்னிலையில் உரையாற்றிய அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனஇ நேற்றைய தினம் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கத்திற்கு வந்த எந்தவொரு விடயங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி இன்றைய நாடாளுமன்ற அமர்வில் நிறைவேற்றவில்லை என்று கூறியதாக சந்திப்பை முடித்துக்கொண்டு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அது மாத்திரமன்றி மீண்டும் ஒருமுறை ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்ததாகவும் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் அலரிமாளிகையில் இன்று இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேராஇ ஜனாதிபதி நேற்றைய சந்திப்பின்போது குறிப்பிட்டதுபோல இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையை நிரூபித்தபடியினால் வெகுவிரைவில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

(அஜித் பி. பெரேரா – ‘ஜனநாயக சம்பிரதாயத்திற்கு அமையஇ பிரித்தானிய வெஸ்மினிஸ்டர் நடைமுறைகளுக்கு அமைய மஹிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவரது நிலமை மோசமாகிவிடும். ஆனால் அரசியல் அதிகாரத்தை கைவிட முடியாது உள்ளார். அதுமாத்திரமன்றி தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான மோசடிஇ படுகொலை குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதை தடுப்பதானது வெட்கக் கேடானது என்பதனை மஹிந்த சிந்திப்பார் என்று தெரியவில்லை. இருந்த போதிலும் ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கோ அல்லது பொதுத் தேர்தலுக்கோ செல்வதற்கு நாம் தயார். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டு முறையான ஆட்சியொன்றின் கீழு் தேர்தல் நடத்தினால் நாம் ஏற்றுக்கொள்வோம். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கடந்த காலங்களில் வெள்ளிக்கிழமைகளில் தான் பரபரப்பான செய்திகள் வெளியாகின. இருந்த போதிலும் பிரதமர் பதவிப்பிரமாணம் குறித்து இன்னும் ஜனாதிபதியிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. எனினும் அடுத்துவரும் 24 மணிநேரத்தில் ஜனாதிபதியிடமிருந்து சிறந்த பதிலொன்று வரும் என எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய தேசிய முன்னணியானது ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராவதையே எதிர்பார்க்கிறது. எனவே பெரும்பான்மைகொண்ட எமக்கு அப்பதவியை ஜனாதிபதி வழங்குவார் என்று நம்புகிறோம்’)

இதேவேளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனஇ நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்ததாக கூறப்படும் தகவல்களில் உண்மை இருக்காது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க ஐ.பீ.சீ தமிழுக்குத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் மற்றம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்த கலந்துரையாடலில் ரவி கருணாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி மைத்ரி தெரிவித்திருந்த உறுதிமொழிகளை அவர் மீறி செயற்பட மாட்டார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி நம்பிக்கை வெளியிட்டார்.

Check Also

லண்டனில் ஆண்களுக்கு உடலை விருந்தாக்கிய பெண் கூறும் காரணம்

லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் இறங்கியதாக மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார். பிரித்தானியாவின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *