Breaking News
Home / பிரித்தானியா / உலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மெர்க்கல் திருமணம்

உலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மெர்க்கல் திருமணம்

பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மெர்க்கல் திருமணம், விண்ட்சோர் நகரில் மிகவும் கோலாகலமாக இன்று நடைபெற்றது.

பிரித்தானிய இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன் ஹரிக்கும்(33), நடிகை மேகன் மெர்க்கலுக்கும்(36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்காக கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

மணமகள் மேகன் மெர்க்கலின் தந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்ததால், அவருக்கு பதிலாக ஹரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ், மேகனுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்த திருமண விழாவிற்கு 600 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அத்துடன் 2,640 பொதுமக்களும் அழைக்கப்பட்டனர். அவர்கள் திருமணத்தைக் காண திடலில் வசதி செய்யப்பட்டது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஓப்ரா வின்பிரே மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோர் முதன்முதலாக திருமணத்திற்கு வந்த பிரபலங்கள் ஆவர்.

இந்த திருமணத்தைக் காண சாலைகளில் நேற்று முதல் லட்சக்கணக்கான மக்கள் நடைபாதையில் இடம்பிடித்து காத்திருந்தனர்.

அரசகுடும்பத்தினர் விண்ட்சோர் நகரில் உள்ள தேவாலயத்திற்கு உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.25 மணியளவில் வர தொடங்கினர். இளவரசர் வில்லியம் மற்றும் மணமகன் ஹரி ஆகியோர் 11.40 மணியளவிலும், பிரித்தானிய ராணி எலிசபெத் 11.52 மணியளவில் தேவாலயத்திற்கு வந்து சேர்ந்தனர்.

மணமகள் மேகன் மெர்க்கல் சரியாக 12 மணிக்கு காரில் வந்து இறங்கினார். அதன் பின்னர், இசைக்குழுவினரின் பிராத்தனை பாடல்களுடன் திருமண மடல் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

பின்னர், இருவரும் ஒருவரையொருவர் முத்தமிட்டு அன்பை பரிமாறினர். திருமணம் முடிந்ததும் விண்ட்சோர் நகர் வீதியில் மணமக்கள் ஊர்வலமாக செல்ல அலங்கார குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

ஊர்வலம் சென்றபோது சாலைகளின் ஓரம் பல்லாயிரக்கணக்கான மக்கள் மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்களையும், நல்வாழ்த்துக்களையும் வழங்கினர். உலகில் உள்ள 80 கோடி பேர் இவர்களது திருமணத்தை தொலைக்காட்சி மூலம் கண்டு ரசித்தனர்.

Check Also

லைக்கா நிறுவனம் இல்லை யென்றால் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை என்ன ?

லைக்கா மோபைல் என்னும் மாபெரும் நிறுவனம் இன்று இல்லை என்றால், ஈழத்தில் உள்ள தமிழர்களின் நிலை என்ன ஆகும் ? …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *