Breaking News
Home / சினிமா / “எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி “சமூக சீர்கேடுகளுக்கு தகுந்த உதாரணம்

“எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி “சமூக சீர்கேடுகளுக்கு தகுந்த உதாரணம்

ஆர்யாவிற்கு  மணப்பெண் தேடும் படலம் ஒருமாதிரியாக  ஒரு முடிவிற்கு வந்தது .16 போட்டியாளர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில்  இறுதியாக சுசனா மற்றும் அகதா, சீதா லக்சுமி இறுதி சுற்றில் பங்கேற்று கடைசியாக ஏமாற்றமடைந்தார்கள் .

ஆரம்பம் தொடக்கம் இறுதிவரை ஆர்யா எல்லா பெண்களுடனும் பழகி இறுதியில் ஒரு பெண்ணை தேர்ந்தெடுப்பார்  என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் எல்லோருக்கும் நல்ல ஆப்பு கொடுத்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

எல்லாம் பெண்களையும் கட்டிதளுவுவது என்ன முத்தமிடுவது என்ன என்று ஆர்யா இந்த நிகழ்ச்சியில் நன்றாக அனுபவித்தார் . பின் இறுதி போட்டியில் ஒருவரை மட்டும் தெரிவு செய்தால் மற்றவர்கள் மனவேதனை அடைவார்கள் என கூறுவது வேடிக்கையாக இருகின்றது . எல்லாம் பெண்களும் போட்டியில் பங்கேற்கும் போது  இறுதியில் ஒரு பெண்ணை தான் மணக்க போகின்றார் என்பதை தெரிந்து தானே எல்லோரும் போட்டியில் கலந்து கொண்டார்கள் .அப்புறம் என்ன மனவேதனை மண்ணாங்கட்டி வேதனை

இதில் கவனிக்க வேண்டிய வேண்டிய விடயம் இது வேண்டுமென்றே ஆர்யாவால் அரங்கேற்றப்பட்ட  விளையாட்டு .இந்த நிகழ்ச்சியில் ஆர்யா நாடத்தும் போதும் சரி ஆர்யா குடும்பத்தை சார்ந்த எவரும் இதில் கலந்து கொள்ள வில்லை.ஆர்யா தான் பெண்களின் வீடிற்கு சென்றார் ,மாறாக பெண்களை தனது வீட்டிற்கு கூட்டி எல்லாம் வர வில்லை . இதில் பெண்கள் தான் ஆர்யாவை நம்பி ஏமாந்து போனார்கள்.

சமூக சீர்கேடுகளை ஏற்படுத்தும் இது போன்ற நிகழ்வுகளை முதலில் நடத்துவதே தவறு.இருப்பினும் எங்க வீட்டு மாப்பிள்ளை  எதிர்ப்புகள் வந்தாலும் இதனை தொடர்ந்தும் நடாத்தியே வந்தனர் .

மேலும் இதில் ஆர்யாவை மட்டும் குறை கூறுவது தவறு .ஏனெனில் இந்த போட்டி பற்றி தெரிந்து தான் 16 பெண்களும் கலந்து கொண்டார்கள்.ஆர்யாவிற்கு முத்தம் கொடுத்தனர் ,கட்டியணைத்தனர் ,ஒரு பெண்ணே முன்வந்து முத்தம் கொடுக்கும் பொழுது ஆண் சும்மாவா  இருப்பான்.

தனக்கு கணவனாக வர போகும் ஆண் ராமனா இருக்க வேண்டும் என தான் பெண்கள் எதிர்பார்பார்கள்.தன் கண் முன்னே தனக்கு  வர போகும் ஆண் பிற பெண்களை கட்டி பிடித்து முத்தம் கொடுப்பதுமாக இருந்தால் எந்த பெண் தான் அதனை பார்த்து கொண்டிருப்பாள் .ஆனால் இது தான் இந்த நிகழ்ச்சியின் கருவே ,எல்லாம் பெண்களுடனும் பழகி விட்டு இறுதியாக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் முடிக்க வேண்டும் என்பதே இதன் விதி .

கடைசியாக  நினைத்தபடியே ஆர்யா எல்லாம் பெண்களையும் ஏமாற்றி விட்டார்.இறுதி போட்டியில் மேடை வரை சுசானா ,அகதா ,மற்றும் சீதா லக்சுமி சென்று நல்ல பல்பு வாங்கினார்கள் . ஆண்கள் எவ்வளவு தவறு செய்தாலும் கடைசியாக பாதிக்கபடுவது பெண்கள் தான் என்பதற்கு இந்த நிகழ்ச்சி தக்க உதாரணம்,

Check Also

முள்ளிவாய்க்கால் தமிழர் படுகொலை நினைவேந்தல் ; மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி.!

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் தமது தார்மீக உரிமையான தனி நாடு கேட்டு அற வழியிலும், ஆயுத வழியிலும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *