கச்சத்தீவு : கச்சத்தீவில் நடைபெற்று வரும் புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் சிங்களர்களே அதிக அளவில் நிறைந்து காணப்படுகின்றனர். தமிழகத்தில் இருந்து 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் இலங்கையைச் சேர்ந்த 6 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களர்கள் என்று சொல்லப்படுகிறது.
கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்களை உலர்த்திக்கொள்ளவும்,அந்தோணியார் கோவிலில் வழிபாட்டிற்கு செல்லவும் உரிமை இருந்தது. ஆனால் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சத்தீவு அருகே சென்றாலே எல்லை தாண்டி வருவதாக மீனவர்களை தாக்குவதும், அவர்களின் படகுகளை சேதம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் பாதுகாப்புடன் தமிழக மக்களை அரசு அந்தோணியார் கோயில் திருவிழாவிற்கு அழைத்து சென்று வருகிறது.