Breaking News
Home / உலகம் / கனடாவில் – இலங்கையை சேர்ந்த பெண் பலி..!

கனடாவில் – இலங்கையை சேர்ந்த பெண் பலி..!

கனடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் டொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரும் பலியாகி உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனார்.

இலங்கையை சேர்ந்த 48 வயதான ரேனுக அமரசிங்க என்ற பெண் உயிரிழந்துள்ளார். இவர் இலங்கையில் ஹொரண பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

மக்கள் மீது வேண்டும் என்றே வாகனத்தை செலுத்தி அனர்த்ததை ஏற்படுத்தியவர் அங்கிருந்து தப்பியோடி இருந்தார். எனினும் அவர் கனேடிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்து சிசிக்சை பெற்று வருவதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Check Also

செல்பி மோகத்தால் 10 மாத பச்சை குழந்தை உடல் சிதறி பலியான கோரம்! (வீடியோ)

இந்தியா ராஜஸ்தானின் கங்காநகரில் உள்ள சிஜிஆர் மாலுக்கு பெண் ஒருவர் தன் பத்து மாதக் கைக்குழந்தை மற்றும் கணவருடன் சென்றுள்ளார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *