Breaking News
Home / உலகம் / கனடாவில் கோர விபத்து: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்

கனடாவில் கோர விபத்து: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்

கனடாவின் டொரண்டோ பகுதியில் நேற்று பாதசாரிகள் மீது வேன் மோதியதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தங்களுக்கும் ஆபத்து நேரலாம் என்பதையும் பொருட்படுத்தாமல் உதவிக்கரம் நீட்ட ஓடி வந்த முதல் உள்ளங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நேற்று சற்றும் மனிதத்தன்மையற்ற வகையில் ஒரு மனிதன் வாடகை வேன் ஒன்றை பாதசாரிகள்மீது ஏற்றிக்கொண்டே சென்றான்.

பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வேனை நிறுத்துமாறு கூச்சலிட்டும், சிலர் தங்கள் வாகனங்களைக் கொண்டு அவனது வேனை நிறுத்த முயன்றும் நிறுத்தாமல், நடைபாதையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது இடித்துக்கொண்டே அந்த மனிதன் சென்றதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர், சுமார் 16 பேர் காயமடைந்தனர்.

பின்னர் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழக்க, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆனது.

மீண்டும் அவன் தங்கள்மீதும் மோதலாம் என்ற நிலையிலும் அக்கம்பக்கத்திலிருந்த சிலர் ஓடோடிச்சென்று காயம்பட்டவர்களுக்கு உதவினர்.

வேனை ஓட்டி இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியவன் பெயர் Alek Minassian (25) என்றும் அவன் Richmond Hill பகுதியைச் சேர்ந்தவன் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது இரங்கல் செய்தியில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“டொரண்டோவில் நிகழ்ந்த மனிதத்தன்மையற்ற தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட நான் மிகுந்த துயரமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைய வாழ்த்துகிறேன்.

தாங்களும் தாக்கப்படலாம் எனும் நிலையிலும் சற்றும் அஞ்சாமல் தைரியத்துடன் களமிறங்கி காயமடைந்தவர்களைக் காப்பாற்ற ஓடோடி வந்தவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தெருக்களில் நாம் பாதுகாப்புடன் நடக்கிறோம் என்னும் எண்ணம் நமக்கு இருக்கவேண்டும்.

இந்த சூழ்நிலையை கூர்ந்து கவனித்துவரும் அதே நேரத்தில் நமது பாதுகாப்புப் படையினருடன் இணைந்து கனடா நாட்டவர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த தொடர்ந்து பாடுபடுவோம் என்பதையும் இந்நேரத்தில் தெரியப்படுத்திக்கொள்கிறேன்”.

கனடா பிரதமரின் இரங்கலுடன் அமெரிக்க துணை அதிபரும் தாங்களும் கனடா சகோதரர்களுக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு கனடியர்களுடன் தோளோடு தோள் சேர்த்து நிற்போம் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Check Also

சுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் தமிழ்ப் பெண் தற்கொலை!

சுவிஸர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டல் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில்தற்கொலை செய்ய முயற்சித்த பெண் இன்று உயிரிழந்துள்ளார். கடந்த செவ்வாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *