Breaking News
Home / பிரபலமானவை / கால்பந்தாட்டத்தில் வெற்றி… உற்சாகத்தில் உயிரிழந்த பிரித்தானிய இளம்பெண்!

கால்பந்தாட்டத்தில் வெற்றி… உற்சாகத்தில் உயிரிழந்த பிரித்தானிய இளம்பெண்!

கொலம்பியா அணிக்கெதிரான கால்பந்தாட்ட போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதை, இரவு முழுவதும் மது குடித்து கொண்டாடிய இளம்பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

ரஷ்யாவில் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் கால்பந்து போட்டியின் நாக்-அவுட் சுற்றில், கொலம்பியா அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக பிரித்தானியாவை சேர்ந்த Rebecca Boyle (32) என்ற பெண் விலையுயர்ந்த சொகுசு கப்பல் ஒன்றில் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டாடியுள்ளார்.

அப்பொழுது போதை அதிகமான அவர், திடீரென மாடிப்படியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நண்பர்களுடன் இணைந்து தண்ணீர் தொட்டியில் குளித்த அவர், உடைகளை மாற்றுவதற்காக தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். விடிந்ததும் காலை உணவிற்கு கூட வெளியில் வராததால் சந்தேகமடைந்த நண்பர்கள் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்பொழுது Rebecca இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நபர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் Rebecca உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் பேசுகையில், அதிகமான மது அருந்தி இறந்துள்ளதால், இந்த சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என்று கூற முடியாது. இதில் மூன்றாவது நபர் யாரேனும் சம்மந்தப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.

முன்னதாக இறந்த நிலையில் மீட்கப்பட்ட Rebecca-வின் கழுத்து பகுதியில், காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Check Also

இளைஞர்களின் மோசமான செயலால் நடு வீதியில் நடந்த அதிர்ச்சி..!

கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *