Breaking News
Home / முக்கியசெய்திகள் / கிளிநொச்சியில் கரும்புலிகள் தினம் தொடர்பான சித்திரம்

கிளிநொச்சியில் கரும்புலிகள் தினம் தொடர்பான சித்திரம்

கிளிநொச்சி அக்கராயன்குளம் , ஸ்கந்தபுரம் பிரதேசத்தின் சில இடங்களில் பிரதான வீதிகளில் கரும்புலிகள் தினம் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் ஈழ வரைப்படங்கள் வரையப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்கந்தபுரம் பேருந்து தரிடப்பிடத்திற்கு எதிரிலும் கோயிலுக்கு அருகிலும் விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் ஈழத்தின் வரைப்படம் என்பன வரையப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பு ஜூலை 5 ஆம் திகதி கரும்புலிகள் தினமாக அனுஷ்டித்து வந்ததது.

இதனை நினைவுகூரும் வகையில் இனந்தெரியாத சிலர் புலிகளின் சின்னத்தையும் ஈழ வரைப்படத்தையும் வரைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சின்னத்திற்கு மேலே ஜூலை 5 கரும்புலிகள் தினம் என தமிழில் எழுதப்பட்டுள்ளது.

சின்னத்தையும் ஈழ வரைப்படத்தையும் வரைந்தவர்கள் பற்றிய தகவல்கள் தெரியவரவில்லை. இது சம்பந்தமாக விசாரணைகளை நடத்தி வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Check Also

அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..

மத்தியதரைக்கடலில் படகு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 450 அகதிகளில் 50 பேரை ஏற்றுக் கொள்ளத் தயார் என ஜேர்மனி அறிவித்துள்ளது. பொறுப்புகளை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *