Breaking News
Home / உலகம் / கேள்விக்குறியான பயணிகளின் எதிர்காலம்!

கேள்விக்குறியான பயணிகளின் எதிர்காலம்!

ஏர் பிரான்ஸ் நிர்வாகத்தின் சிறியளவிலான சம்பள அதிகரிப்பை நிராகரித்த ஏர் பிரான்ஸ் விமானத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள், மே மாத ஆரம்பத்தில் மேலதிக வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.Air France strike held May start
அதிகமான தொழிற்துறை நடவடிக்கைகளை முடக்குவதன் மூலம் விமான நிறுவனத்தின் முதலாளிகளுக்கு அழுத்தத்தை அதிகரிக்க ஏர் பிரான்ஸின் ஊழியர்கள் மே மாத பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

உண்மையான திகதிகளை குறிப்பிடாமல் “மே மாத ஆரம்ப கட்டத்தில் வேலைநிறுத்தங்கள் மேற்கொள்ளப்படும்” என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தமையால் பயணிகள் தங்கள் பயணத் தீர்மானங்களை மாற்றியுள்ளனர். ஆனால், இந்த வாரம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றது.

 

மேலும், ஏர் பிரான்ஸ் பைலட்டுகள், கேபின் குழுக்களும் தரைப்படை ஊழியர்களும் ஏற்கனவே பெப்ரவரி முதல் ஒன்பது நாட்களாக வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். திங்கள் ஏப்ரல் 23 மற்றும் செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 24 இலும் வேலை நிறுத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இந்த வேலைநிறுத்தங்கள் தங்கள் வியாபாரத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன,” என்று ஏர் பிரான்ஸ் முதலாளிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால், ஏர் பிரான்ஸின் எதிர்காலம் ஆபத்தான நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

முள்ளிவாய்க்கால் தமிழர் படுகொலை நினைவேந்தல் ; மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி.!

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் தமது தார்மீக உரிமையான தனி நாடு கேட்டு அற வழியிலும், ஆயுத வழியிலும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *