Breaking News
Home / உலகம் / சிரியா மீது ஈராக்கின் கொடூர தாக்குதல்!

சிரியா மீது ஈராக்கின் கொடூர தாக்குதல்!

அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, இஸ்ரேலை தொடர்ந்து சிரியாவில் IS தீவிரவாதிகளின் இடத்தை அழிக்க ஈராக்கும் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.q attack Syria
ஈரானும் வான் வழித் தாக்குதல்களில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், ஈராக் தாக்குதல் நிகழ்த்தியே விட்டது.

தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது தகுத்த நடவடிக்கை எடுப்போம் என்று Iraq பிரதமர் ஹைதர் அல் அபாதி கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

 

ஈராக்கின் இந்தத் தாக்குதலை சிரிய ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டமாஸ்கஸ் பகுதிகளை மீட்க, சிரிய படைகள் புதன்கிழமை குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இந்த நிலையில் Iraq IS ஐ குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கான ஆதாரங்கள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. முதலாவதாக ஈராக் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் ராணுவத் தளபதி Dr. Haider Abadiயின் உத்தரவின் பேரில் நமது விமானப்படைகள் ஈராக் எல்லையில் தீவிரவாதக் குழுக்கள் முகாமிட்டுள்ள இடங்கள் மீது மோசமான வான் வெளித்தாக்குதல் நிகழ்த்தின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஈராக் விமானப்படை வீடியோ மற்றும் புகைப்படங்களில் போர் விமானங்கள் குண்டுகளை சுமந்து கொண்டு செல்வதும் குண்டு வீசப்பட்டதற்கு ஆதாரமாக, திரும்பி வரும் விமானங்களில் சில குண்டுகள் இல்லாமலிருப்பதும் காட்டப்பட்டுள்ளது.

ஊடகங்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்திகளும் குண்டு வீசப்பட்டதை உறுதி செய்கின்றன.

ஈராக் விமானப்படை வெளியிட்டுள்ள இரண்டாவது வீடியோவில், ஐ.எஸ் தீவிரவாத குழுக்கள் பயன்படுத்துவதாகக் கருதப்படும் ஒரு கட்டிடம் வெடி குண்டுத்தாக்குதலில் சிதைந்து சின்னாபின்னமாகும் காட்சி பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிரிய நாட்டு அதிபருக்கு எதிராக களமிறங்கியுள்ள நிலையில், ஈராக் மட்டும் தான் சிரிய ராணுவத்துடன் இணைந்து ஐ.எஸ்க்கு எதிரான போரில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Check Also

முள்ளிவாய்க்கால் சென்று வீடு திரும்பும் மக்களை இடைமறிக்கும் இராணுவம்! காரணம் இதுதானாம்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் ஸ்ரீ லங்கா இராணுவத்தினர் கொட்டகை அமைத்து குளிர்பானங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *