Breaking News
Home / கிசு கிசு / சிறை சென்றார் டிவி நடிகை கிம் கர்தாஷியான் : பெரும் பரபரப்பு..!

சிறை சென்றார் டிவி நடிகை கிம் கர்தாஷியான் : பெரும் பரபரப்பு..!

<> at KKW Beauty on June 30, 2018 in Los Angeles, California.
டிவி நடிகை கிம் கர்தாஷியான் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு சிறைக்குச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் தெரியவருகையில்.. :-

அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் ரியாலிட்டி ஷோ நடிகையாக இருப்பவர் கிம் கர்தாஷியான். இவர் ஹாலிவுட் கவர்ச்சி பாம் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், இவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு சிறைக்குச் சென்றுள்ளார். இச் சம்பவம் அமெரிக்க ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க வார இதழ் ஒன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.. :-

சமீபத்தில், ரியாலிட்டி டிவி நடிகை கிம் கர்தாஷியான் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு சிறைக்குச் சென்றார். அங்கு, அவர் ஆயிரத்து 800 கைதிகளின் இருப்பிடங்களை பார்வையிட்டார். மேலும், 15 பெண் கைதிகளைச் சந்தித்து பேசியுள்ளார்.

அவர்களிடம் சிறை அனுபவத்தைப் பற்றி கேட்டறிந்ததுடன், விடுதலைக்குப் பின் சமுதாயத்திற்கு திரும்புவது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து, சமுதாயத்தில் பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்று கிம் கூறியதாக, அந்த வார இதழ் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக கிம் கர்தாஷியான், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து, சிறைச்சாலை சீர்திருத்தத்தைப் பற்றி விவாதித்தார்.

இதையடுத்து, ஆயுள் தண்டணை அனுபவித்து வந்த கிம் கர்தாஷின் பாட்டி, அலிஸ் மரி ஜான்சன் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ரகுமானுக்கு ஆப்பு வைத்து அனிருத், இசைப்புயலுக்கு இப்படி ஒரு நிலைமையா?

அனிருத் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர். இவருடைய வளர்ச்சி பலருடைய வயிற்றில் நெருப்பை தான் கட்டியுள்ளது. இந்த நிலையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *