Breaking News
Home / உலகம் / செல்பி மோகத்தால் 10 மாத பச்சை குழந்தை உடல் சிதறி பலியான கோரம்! (வீடியோ)

செல்பி மோகத்தால் 10 மாத பச்சை குழந்தை உடல் சிதறி பலியான கோரம்! (வீடியோ)

இந்தியா ராஜஸ்தானின் கங்காநகரில் உள்ள சிஜிஆர் மாலுக்கு பெண் ஒருவர் தன் பத்து மாதக் கைக்குழந்தை மற்றும் கணவருடன் சென்றுள்ளார்.

அங்கு மூன்றாவது தளத்திற்குச் செல்ல எஸ்கலேட்டரின் உதவியை நாடியுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் கணவர் எஸ்கலேட்டர் இயக்கத்தில் இருக்கும் சமயத்தில் ஒரு செல்ஃபி எடுக்குமாறு அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார்.

அப்போது, அந்த பெண் செல்ஃபி எடுக்க முயன்ற போது அந்தப் பெண் கையிலிருந்த 10 மாதக் கைக்குழந்தை நிலை தடுமாறி எஸ்கலேட்டருக்கும் நடைபாதைக் கைபிடிக்கும் இடையே மோதிக் கீழ் தளத்தில் விழுந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்தக் குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அங்கு தரையில் மோதிய உடனேயே அந்தக் குழந்தையின் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

செல்பி மோகத்தால் அநியாயமாக பச்சை குழந்தை பலியாகிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Check Also

முள்ளிவாய்க்கால் சென்று வீடு திரும்பும் மக்களை இடைமறிக்கும் இராணுவம்! காரணம் இதுதானாம்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் ஸ்ரீ லங்கா இராணுவத்தினர் கொட்டகை அமைத்து குளிர்பானங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *