Breaking News
Home / இலங்கை / ஜனாதிபதியை வரவேற்றார் பிரித்தானியப் பிரதமர்

ஜனாதிபதியை வரவேற்றார் பிரித்தானியப் பிரதமர்

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அந்த நாட்டுப் பிரதமர் தெரேசா மே வரவேற்றுள்ளார்.

பொதுநலவாய அமைப்பின் 25 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் தலைமையில் நேற்று முற்பகல் பக்கிங்ஹாம் மாளிகையில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவதற்காகச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வரவேற்றுள்ளார்.

அத்துடன், மாநாட்டிற்கு சென்ற அரச தலைவர்களை இளவரசர் சார்ள்ஸ் வரவேற்றதுடன், பொதுநலவாய அமைப்பின் தலைவராக அரச தலைவர்களிடையே உரையாற்றிய பிரித்தானிய மகாராணியார்,

பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் மக்கள் உணரக்கூடிய அனுகூலங்களை பெற்றுத்தர பொதுநலவாய உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

மேலும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமாக புதிய வியாபார, வர்த்தக மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவும் புதிய வழிமுறைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என பிரித்தானிய மகாராணியார் தெரிவித்தார்.

‘பொதுவான எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளில் இன்று ஆரம்பமான பொதுநலவாய அமைப்பின் 25ஆவது அரச தலைவர்கள் மாநாட்டில் சுபீட்சம், பாதுகாப்பு, சமநிலை, பேண்தகு தன்மை போன்ற விடயங்களின் கீழ் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் இலக்குகளை அடைதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

Today saw the formal opening of CHOGM. The opening ceremony was held in the Ballroom in Buckingham Palace prior to the first executive session at Lancaster House. The opening marks the official start to CHOGM. The opening saw the Prime Minister make a short speech along with HM The Queen, the Commonwealth Secretary-General and the PM of Malta.
The openings saw the National Anthem sung by Emeli Sande. The end of the ceremony saw a family photo with HM The Queen and the 53 other Commonwealth leaders.

Check Also

யாழில் 16 வயது சிறுமி 08 மாத கர்ப்பிணியாகிய சம்பவம்; ஒருவர் கைது!

யாழ் – தென்மராட்சி பகுதியில் சிறுமியொருவரை கர்ப்பிணியாகியுள்ளார்.என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நேற்று மாலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *