Breaking News
Home / இலங்கை / தொட்டலங்கவை சுற்றிவளைத்த அதிரடிப்படை : பாதாளகுழு உறுப்பினர்கள் கைது

தொட்டலங்கவை சுற்றிவளைத்த அதிரடிப்படை : பாதாளகுழு உறுப்பினர்கள் கைது

பல குற்றச் செயல்களுடன் தொடர்பான பிரபல பாதாள உலக குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் கொழும்பு தொட்டலங்க பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்தப் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 15, பெர்குசன் பகுதியைச் சேர்ந்த நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்த நபர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக கொழும்பிலும் தெற்கிலும் இடம்பெறும் பாதாள உலகக்குழுக்களின் மோதல்கள், கொலைகளின் பின்னணியில் இருக்கும் பிரதான புள்ளியான, தற்போது டுபாயில் வசிக்கும் மாகந்துரே மதூஸிற்கும் கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Check Also

முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் இன்று நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *