Breaking News
Home / சுவாரஸ்யங்கள் / நடப்பு சாம்பியன் சென்னை ஸ்மாஷர்ஸ் வென்றது…. ஆனால் வெளியேறியது

நடப்பு சாம்பியன் சென்னை ஸ்மாஷர்ஸ் வென்றது…. ஆனால் வெளியேறியது

சென்னை: பிரீமியர் பாட்மின்டன் லீக் போட்டியின் மூன்றாவது சீசனில் நடந்த ஆட்டத்தில் மிகவும் வலுவான பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியை 3-2 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி வென்றது. ஆனால் அதை இறுதிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தது. பிரீிமியர் பாட்மின்டன் லீக் மூன்றாவது சீசன் போட்டிகள் நடக்கின்றன. மொத்தம் எட்டு அணிகள், பங்கேற்கும் இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி முதல் டையில் அவதே வாரியர்ஸ் அணியிடம் 4-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

மும்பை ராக்கெட்ஸ் அணியை 4-3 என்ற கணக்கில் வென்றது. டெல்லி டேஷர்ஸ் அணியிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணியை 2-1 என்ற கணக்கில் வென்றது. வாழ்வா சாவா என்ற நிலையில், பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் சென்னையில் நேற்று இரவு நடந்தது. இதில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் பி.வி. சிந்து 2-0 என்ற கணக்கில் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமீத் ரெட்டி, லீ யாங் ஜோடியும் அபார வெற்றியைப் பெற்றது.

Check Also

எதிர்பாராத நேரத்தில் சிலிண்டர் வெடித்ததால் வீடு முழுவதும் சேதம்

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு முழுமையாகச் சேதமடைந்ததுடன், வீட்டிலிருந்த உடைமைகளும் எரிந்து சாம்பராகின. இந்தச் சம்பவம் உரும்பிராய் ஊரெழு கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *