Breaking News
Home / இலங்கை / நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அல்லது இருவர் கொல்லப்படலாம்; மஹிந்த!

நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அல்லது இருவர் கொல்லப்படலாம்; மஹிந்த!

சிறிலங்கா நாடாளுமன்றில் கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடரஅனுமதித்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அல்லது இருவர் கொல்லப்படலாம் என சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மிக நெருக்கமான அரசியல்வாதியாகக் கருதப்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர அச்சம் வெளியிட்டிருக்கின்றார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்உத்தரவிற்கு இடைக்கால தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளதை அடுத்துநவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் சபாநாயகரால் கூட்டப்பட்டது. அன்றைய தினம் மைத்ரியினால்பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவிற்கும், அவரது அமைச்சரவைக்கும் எதிராகநம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை மஹிந்தவும், அவரது அணியினரும் நிராகரித்த நிலையில், சிறிலங்கா ஜனாதிபதியும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளமறுத்துவிட்டால். இதனையடுத்து மறுநாளான நவம்பர் 15 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியநிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் –மஹிந்தவாதிகளுக்கும் இடையில் கைகலப்பும் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் நவம்பர் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமைபிற்பகல் கூடிய நிலையில் மஹிந்தவாதிகளால் நாடாளுமன்ற அவைக்குள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டிருந்தனர்.

நாட்டின் பிரதமர் என்ற கேள்விக்கு இன்னமும் எந்தவொரு முடிவும்எட்டப்படாத நிலையில் நவம்பர் 19 ஆம் திகதியான நாளைய தினம் திங்கட்கிழமை பிற்பகல் நாடாளுமன்றம்கூடவுள்ளது.

இதேவேளை நவம்பர் 9 ஆம் திகதி நள்ளிரவுடன் நாடாளுமன்றத்தை கலைத்தசிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன மறுநாள் நாடாளுமன்றத்தை கலைக்க எடுத்த தீர்மானத்திற்கானகாரணங்களை நாட்டு மக்கள் முன் தோன்றி தெளிவுபடுத்தியிருந்தார். இதன்போது நாடாளுமன்றம்கூட்டப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை படுகொலை செய்ய சதித்திட்டமொன்று இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில் இன்னமும் பிரதமர் யார் என்ற பிரச்சனைக்கு தீர்வுகாணப்படாது அரசியல் குழப்பம் நீடித்து வருகின்றது. குறிப்பாக நாடாளுமன்றில் மஹிந்தவாதிகளின் குழப்பத்திற்கு மத்தியிலும் மஹிந்த அவரது அமைச்சரவைக்கு எதிராக இரண்டு தடவைகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுது.

ஐக்கிய தேசியக் கட்சிஅதன் கூட்டணிக் கட்சிகள், ஜே.வி.பி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆகியன ஆதரவு அளித்திருந்த நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பபட்டதாக சபாநாயகர கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துடன், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

எனினும் ஜனாதிபதி இந்த தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளாது நிராகரித்துவிட்டார். அதேவேளை மஹிந்த ராஜபக்சவும், அவரது கட்சியான தாமரை மொட்டுக்கட்சி என்று அழைக்கப்படும் பொதுஜன பெரமுன, மற்றும் மைத்ரிதலைமையிலா சுதந்திரக் கட்சியினரும் நம்பிக்கையில்லாப் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளமறுத்து வருவதுடன், தாங்களே தொடர்ந்தும் அரசாங்கம் என்றும்கூறி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அங்குணுகொலபெலஸ்ஸ தேர்தல்தொகுதிசை் சேர்ந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கனை சந்தித்து கலந்துரையாடியஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இந்தத் தகவலை கூறியிருக்கின்றார்.

இந்த கலந்துரையாடலில் மேலும கருத்துத் தெரிவித்துள்ள அமரவீர, பிரதமர் ஒருவரை நியமிப்பது, அமைச்சரவையை நியமிப்பதுஅல்லது நாடாளுமன்றத்தை கலைப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் அரசியல் சாசனப்படி நாட்டின்அரச தலைவரான ஜனாதிபதிக்கே இருப்பாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சபாநாயகருக்கு அந்த அதிகாரங்கள் இல்லை என்றும்அடித்துக்கூறியுள்ள மஹிந்த அமரவீர, அதேபோல் ஜனாதிபதியின் உத்தரவுகளை கேள்விக்குட்படுத்தவோஅல்லது நடைமுறைப்படுத்தாது இருப்பதற்கும் சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்றும் அமரவீரசுட்டிக்காட்டியுள்ளார்.

இதனாலேயே சபாநாயகராக தெரிவாகும் நபர் எந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அவர் பக்கச்சார்பின்றி செயற்பட்டு சபாநாயகருக்கான கௌரவத்தை பேணவேண்டும் என்ற விதிமுறை இருப்பதாகவும் தெரிவித்துள்ள அமரவீர, எனினும் தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய அவரது கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்காக நாடாளுமன்ற சம்பிரதாயங்களையும், அரசியல்சாசனத்தையும் அப்பட்டமாக மீறி செயற்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியிருக்கின்றார்.

Check Also

லண்டனில் ஆண்களுக்கு உடலை விருந்தாக்கிய பெண் கூறும் காரணம்

லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் இறங்கியதாக மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார். பிரித்தானியாவின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *