Breaking News
Home / இலங்கை / நாடு கடத்தப்பட்ட இலங்கையருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

நாடு கடத்தப்பட்ட இலங்கையருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

போலி விசாவை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கண்டி ஒகஸ்டவத்தை பகுதியை சேர்ந்த 21 வயதான பீ. சஞ்சய வீரசிங்க என்ற இளைஞரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் போலி விசாவை பயன்படுத்தி துருக்கி சென்று அங்கிருந்து இத்தாலி செல்ல முயற்சித்துள்ளார்.

இதன்போது துருக்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இவர் நாடு கடத்தப்பட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த சந்தேகநபரை கைது செய்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மினுவங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேகநபரை 10,000 ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு மினுவங்கொடை பதில் நீதவான் சரல கருணாரத்ன உத்தரவிட்டுள்ளார்.

Check Also

முள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இராணுவத்தினர் !

முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *