Breaking News
Home / இலங்கை / பருவப்பெயர்ச்சி காலநிலை வலு முன்னெச்சரிக்கை

பருவப்பெயர்ச்சி காலநிலை வலு முன்னெச்சரிக்கை

நாட்டில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை நிலை படிப்படியாக வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு கிழக்கு வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்தியஇ கிழக்குஇ ஊவா சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் தென் கடற்பரப்புகளில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்தியஇ சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்று திணைக்களம் மேலும் தெரிவி;துள்ளது.

Check Also

லொறி ஒன்றினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது

மாத்தளையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த லொறி ஒன்றினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது. குறித்த லொறியின் உதவியாளர் ஒருவரின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *