Breaking News
Home / பிரபலமானவை / பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை ஆலோசனை

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை ஆலோசனை

சென்னை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதுகுறித்து அனைத்து ஆளுநர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தமிழக மாவட்டங்களும் சென்று தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார். இதற்கு அரசியல்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து மாவட்டங்களின் வளர்ச்சிப்பணி மற்றும் தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி ஊழல் புகாரில் சிக்கினார். பல்கலைக்கழகப் பணி நியமனங்களில் முறைகேடு செய்திருப்பதாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Check Also

நிர்வாணமாக உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடிய பிரான்ஸ் ரசிகர்கள்

24 ஆண்டுகளுக்கு பிறகு கால்பந்தாட்ட போட்டியில் உலகக்கோப்பையை கைப்பற்றியதால் அந்நாட்டு மக்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். அந்நாட்டு ரசிர்கள் தங்களது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *