Breaking News
Home / பிரபலமானவை / பாழடைந்த கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

பாழடைந்த கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

மாத்தறை பிடபெத்தர பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த மூன்று தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில், இன்றைய தினம் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மாத்தறை பிடபெத்தர பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவர் என்றும் அடையாளங் காணப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிடபெத்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

முள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இராணுவத்தினர் !

முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *