Breaking News
Home / இலங்கை / பிரபாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த நாம் எதற்கும் தயங்கமாட்டோம்

பிரபாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த நாம் எதற்கும் தயங்கமாட்டோம்

தலைவர் வே.பிரபாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த நாம் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்ட தயங்கமாட்டோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கே. இன்பராசா தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களின் வாழ்வாதாரம் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தின் திருக்கோயில் பிரதேசத்திற்குட்பட்ட தாண்டியடி கிராமிய அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்தும் முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் மிகவும் மோசமான நிலைமைகளிலேயே உள்ளது. இது தொடர்பாகவே நாம் இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள மக்களை சந்தித்து அவர்களது குறைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக கலந்தாலோசித்துள்ளோம்.

அந்தவகையில் முதலில் நான் இவ்விடத்தில் முக்கியமான ஒரு விடயத்தை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இன்றைய இந்த சந்திப்பு தொடர்பாக மாவீரர் குடும்பங்கள் முன்னாள் போராளிகளை சந்தித்து குறைகளை கேட்பதற்காக சென்ற வேளையில், அவர்கள் என்ன கொண்டுவந்துள்ளனர்? எதனைத்தரப் போகின்றனர்? என்று எதிர்பார்க்கின்றனர். காரணம் அரசியல்வாதிகள் எமது மக்களை அற்ப சொற்ப பொருட்களுக்காக மாற்றியமைத்துள்ளனர்.

இது தொடர்பாக மிகவும் கவலை கொள்கின்றேன். அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நலனுக்காக எமது மக்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக கொடுக்கின்ற பொருட்கள் போல் நாமும் பொருட்கள் கொடுக்கத்தான் வந்துள்ளோம் என மக்கள் எண்ணியிருந்தனர். பின்பு எமது வருகை தொடர்பாக கூறியதன் பிற்பாடுதான் சிலர் தற்போது எம்முடன் இணைந்து வந்துள்ளனர்.

எமது மாவீரர் குடும்பங்கள் முன்னாள் போராளிகளை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் கூட்டமைப்பினர். எமது மக்களுக்காக என்ன செய்துள்ளனர்? அவர்களது வாழ்வாதாராம் தொடர்பாக நிரந்தர நடவடிக்கைகள் என்ன எடுத்துள்ளனர்? அவர்கள் நலனுக்காக அரசியல் நடத்தி வருகின்றனர். இது சம்மந்தமாக நாங்கள் அவர்களது பிழைகளை வெளிக்கொண்டுவருவோம் .

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த நாம் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்ட தயங்கமாட்டோம்.

எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை. எமது கட்சி கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் சேவைகளை தொடர்ந்து வந்தோம்.

அடுத்த கட்ட நகர்விற்காக அம்பாறை மட்டக்களப்பு பகுதிகளில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பத்தாரின் வாழ்வாதாரங்கள் சம்மந்தமாக புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் இந்த நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளோம்.

அந்தவகையில் புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற எனது உறவுகள் இதனை கவனத்தில் கொண்டு இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முன்வரவேண்டும் என தெரிவத்திருந்தார்.

இந்த ஊடக சந்திப்பின் போது புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ். ஜோன்சன் மற்றும் கோமாரி, திருக்கோயில், தாண்டியடி ஆகிய பிரதேசங்களில் உள்ள முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்களின் பெற்றோர்கள் உறவினர் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

முள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இராணுவத்தினர் !

முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *