Breaking News
Home / பிரித்தானியா / பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் இளைஞக்கு கிடைத்த இரு அதிர்ஷ்டங்கள்!

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் இளைஞக்கு கிடைத்த இரு அதிர்ஷ்டங்கள்!

பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கை தமிழ் இளைஞனுக்கு இருவிதமான அதிர்ஷ்டம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளருக்கு பிரித்தானிய பல்கலைக்கழத்தில் கற்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஜனஹன் சிவனந்தன் என்ற இலங்கை தமிழ் இளைஞனுக்கே இந்த சந்தர்ப்பம் கிடைத்தது.

ஜனஹனின் குடும்பத்தினருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் தனது 17 வது வயதில் லண்டனுக்கு சென்றுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்கள் ஜனஹன்கார் தயாரிக்கும் இடத்திலேயே தங்கியிருந்துள்ளார். அவர் தற்கொலை செய்ய முயற்சித்து அதிகாரிகளினால் காப்பற்றப்பட்டார்.

இதனையடுத்து limboவில் வீட்டு காவலில் இருந்த நிலையில், அகதி அந்தஸ்தை அடைவதற்கு தீவிரமாக முயற்சித்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வழக்கறிஞராகும் நோக்கத்தில் கல்வி கற்றார். எனினும் கற்கையை நிறைவு செய்வதற்கு அவருக்கு அகதி அந்தஸ்த்து கிடைக்கவில்லை.

ஜனஹனின் கதை உண்மையாக இருந்த போதிலும், இது பிரித்தானியாவில் ஒரு சாதாரனமான விடயம். புகலிடம் கோருவோர் பெரும்பாலும் அகதி அந்தஸ்த்தை இலகுவாக பெற்றுக்கொள்ள முடிவதில்லை. சிலருக்கு பல வருடம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிவனந்தனின் புகலிட கோரிக்கை தெளிவாக உள்ளது. எனினும் அவரது புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தற்போது என்ன செய்வதென தெரியாமல் இருந்த நிலையில் வீடற்ற நிலையிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிவனந்தனுக்கு இரண்டு அதிஷ்டங்கள் கிடைத்துள்ளன. அவருக்கு அறை ஒன்றில் தங்கியிருக்க அனுமதி கிடைத்துள்ளது. இலங்கையர் ஒருவரினால் இவ்வாறு அறை பகிரப்பட்டுள்ளது.

அத்துடன் கெம்பாஸ் திட்டம் ஒன்றிலும் அவர் அறிமுகப்படுத்தப்பட்டார். அவருக்கு அகதி அந்தஸ்து இல்லாத நிலையில் பல்கலைக்கழக கல்வி தொடங்குவதற்கான வாய்ப்பை கிடைத்துள்ளது.

லண்டன் பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த கெம்பாஸ் திட்டத்தில் இணைந்து கற்பதற்கு 20 அகதிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

லண்டனில் ஆண்களுக்கு உடலை விருந்தாக்கிய பெண் கூறும் காரணம்

லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் இறங்கியதாக மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார். பிரித்தானியாவின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *