Breaking News
Home / இலங்கை / புதுக்குடியிருப்பில் குண்டுவெடிப்பு! அச்சத்தில் மக்கள்

புதுக்குடியிருப்பில் குண்டுவெடிப்பு! அச்சத்தில் மக்கள்

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இன்று நன்பகல் குண்டுகள் சில வெடித்து சிதறியதில் அங்கே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

தனியார் ஒருவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் காணிகளை துப்பரவு செய்து தீமூட்டிய போதே இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைவிடப்பட்ட வெடிபொருட்களே இவ்வாறு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இறுதி யுத்தத்தின்போது போரில் ஈடுபட்ட இருதரப்பினரினால் கைவிடப்பட்ட அபாயகரமான வெடிபொருட்கள் ஆனந்தபுரம் உள்ளிட்ட கிராமங்களில் தற்பொழுதுவரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கடற்படைக்கு காத்திருக்காமல் காணிக்குள் கால் வைத்த தமிழ் மக்கள்!

ஸ்ரீலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தமது பூர்வீக நிலங்களில் தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பணிகளை முள்ளிக்குளம் கிராம மக்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *