Breaking News
Home / இலங்கை / பௌத்த சமய வழிபாடுகளுடன் வவுனியா நகரசபை உறுப்பினர்களின் வரவேற்பு நிகழ்வு.!

பௌத்த சமய வழிபாடுகளுடன் வவுனியா நகரசபை உறுப்பினர்களின் வரவேற்பு நிகழ்வு.!

வவுனியா நகரசபை உறுப்பினர்களின் வரவேற்பு நிகழ்வு பௌத்த சமய வழிபாடுகளுடன் நடைபெற்றது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் புதிய தவிசாளர் இ.கௌதமன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட 21 உறுப்பினர்களும் வரவேற்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பௌத்த மதகுரு மற்றும் கிறிஸ்தவ மதகுரு ஆகியோர் கலந்து கொண்டதுடன் நகரசபை எல்லைக்குள் அதிகமாக வசிக்கும் இந்து மக்களை பிரதிநித்துவப்படுத்தும் மதகுருவோ, இஸ்லாமிய மதகுருவோ கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் பௌத்த மதகுருவின் ஆசிர்வாத வழிபாட்டுடன் சபை உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதனால் சபையில் இருந்த பலரும் அதிருப்தி அடைந்தனர்.

வரவேற்பு நிகழ்வில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.‌

Check Also

முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் இன்று நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *