Breaking News
Home / சினிமா / மகாபாரதம் படத்தில் இணையும் சல்மான்கான்

மகாபாரதம் படத்தில் இணையும் சல்மான்கான்

ரூ.1,000 கோடி செலவில் இந்தியில் படமாக எடுக்கப்படவுள்ள மகாபாரதம் கதையில் சல்மான்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஏற்கனவே இப் படத்தில் அமீர்கான் நடிப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. அவர் அர்ஜுனன் வேடத்தில் நடிப்பதாக கூறுகின்றனர். மேலும், இதர கதாபாத்திரங்களுக்கு நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது.

இந்நிலையில், தற்போது சல்மான்கானும் இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர் கிருஷ்ணர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ”பத்மாவத்” சரித்திர படத்தில் பத்மாவதியாக வந்த தீபிகா படுகோனேவை மகாபாரதம் படத்தில் திரௌபதி வேடத்தில் நடிக்க வைக்க பேசி வருகின்றனர்.

அத்துடன், மலையாளத்திலும் ”மகாபாரதம்” கதையை பெரிய பட்ஜெட்டில் படமாக எடுக்கின்றனர். இப் படத்தில் மோகன்லால் பீமனாகவும், நாகார்ஜுனா கர்ணனாகவும் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

பிரபுதேவாவை திருமணம் செய்கிறேனா?: நடிகை நிகிஷா

பிரபுதேவாவை திருமணம் செய்வது குறித்து நடிகை நிகிஷா பட்டேல் விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு புலி படம் மூலம் நடிகையானவர் இங்கிலாந்தை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *