Breaking News
Home / இலங்கை / மதவாச்சியில் கணவன் மனைவி பலி

மதவாச்சியில் கணவன் மனைவி பலி

மதவாச்சி கரம்பன்குளம் பிரதேசத்தில் வான் மற்றும் மோட்டார் சைக்களில் மோதி விபத்துக்குள்ளாகியதில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வானின் சாரதி காயமடைந்த நிலையில், மதவாச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த கணவன் மற்றும் மனைவி மதவாச்சி கல்கதந்தகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்த மனைவியின் வயது 21 என்பதுடன், கணவரின் வயது 25 என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மாங்காட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐவர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண்!

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *