Breaking News
Home / இலங்கை / மன்னாரில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் : 5 வருடங்களின் பின் சிக்கினார்!

மன்னாரில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் : 5 வருடங்களின் பின் சிக்கினார்!

மன்னாரில் பாலியல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் கடந்த 5 வருடங்களின் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை செட்டிக்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். குறித்த சந்தேக நபரை எதிர் வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமம் ஒன்றில் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் துஸ்பிரயோக சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் அன்றைய தினம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் பெண்கள், சிறுவர் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது சந்தேக நபரைக் கைது செய்ய மன்னார் பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த நபர் தலை மறைவாகியுள்ளார்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகரால், குறித்த சந்தேக நபரை கைது செய்ய மன்னார் மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.முனசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வந்த நடவடிக்கையின் காரணமாக குறித்த நபர் 5 வருடங்களின் பின்னர் தலைமறைவாகியிருந்த நிலையில் செட்டிக்குளம் பகுதியில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு மன்னார் மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார்.

கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை விசாரணைக்கு உட்படுத்திய நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Check Also

வெளிநாட்டு பெண்ணை கற்பழித்து திருட்டு வாழ்க்கை….நண்பனை கணவனாக்கிய கொடூரம்…சும்மா விடுமா அந்த பெண்

சென்னையை சேர்ந்த தொழிலதிபரால் தாய்லாந்து பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *