Breaking News
Home / சினிமா / மீண்டும் ‘இருவர்’ பட கெட்டப்பில் தோன்றிய ஒல்லி ஐஸ்வர்யா. இடுப்பு, கை, கால்களுக்கு என்னாச்சு?

மீண்டும் ‘இருவர்’ பட கெட்டப்பில் தோன்றிய ஒல்லி ஐஸ்வர்யா. இடுப்பு, கை, கால்களுக்கு என்னாச்சு?

அண்மையில் இடம்பெற்ற போட்டோ ஷூட்டில் ஐஸ்வர்யா ராய் வழமைக்கு மாறாக மிகவும் ஒல்லியாக காணப்பட்டார். தற்போது ஐஸ்வர்யா திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்டார். இதனால் முன்பு போல் அல்லாமல் கொழு கொழுன்னு இருந்தார்.

திருமணத்தின் பின் நடிப்பில் அவ்வளவாக கவனம் செலுத்தாத ஐஸ், குழந்தை கிடைத்ததன் பின் முற்றாக ஒதுங்கி இருந்தார்.

தற்போது இவர் பட விழாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். மேலும், சில படங்களில் நடிப்பதற்கும் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவரை வைத்து போட்டோ ஷூட் நடாத்தப்பட்டிருந்தது. இதில் ஐஸ்வர்யா ஆரம்பத்தில் இருந்ததை போல மிகவும் ஒல்லியாக இருந்தார். இடுப்பு, கை கால் எல்லாம் மிகவும் மெலிதாக இருந்தது.பின்னர் தான் தெரிய வந்தது, அது போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்டிருப்பதாக.

ஆரம்பத்தில் உலக அழகி பட்டம் பெட்ரா பின்னர், தமிழில் நடிக்க ஆரம்பித்த போது அவர் மிகவும் ஒல்லியாகவே காணப்பட்டார். பின்னர் ஹிந்தி திரையுலகுக்கு சென்று அபிஷேக் பச்சனை திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆனார்.

அப்போது இருந்த தோற்றம் முற்றாக மாறி தற்போது கொஞ்சம் கொழு கொழுன்னு இருக்கும் ஐஸ்வர்யாவை ஒல்லியாக காட்டியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Source From: Vogue 

Check Also

மகாபாரதம் படத்தில் இணையும் சல்மான்கான்

ரூ.1,000 கோடி செலவில் இந்தியில் படமாக எடுக்கப்படவுள்ள மகாபாரதம் கதையில் சல்மான்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஏற்கனவே இப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *