Breaking News
Home / பிரபலமானவை / மீண்டும் பிரித்தானியாவின் நச்சுத்தாக்குதல்: உறுதி செய்த வீடியோ

மீண்டும் பிரித்தானியாவின் நச்சுத்தாக்குதல்: உறுதி செய்த வீடியோ

பிரித்தானியாவின் சாலிஸ்பரியில் முன்னாள் ரஷ்ய உளவாளிகள் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நோவிச்சோக் என்னும் நச்சுப்பொருளால் தாக்கப்பட்டு மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய நிலையில் சாலிஸ்பரிக்கு அருகில் உள்ள Amesbury என்னுமிடத்தில் மீண்டும் இருவர் நச்சுத் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

உடனடியாக Amesburyயிலுள்ள Muggleton சாலையில் அமைந்திருக்கும் அவர்கள் வீட்டுக்கு பொலிசார் அழைக்கப்பட்டனர்.

Dawn Sturgess (44) மற்றும் Charlie Rowley (45) ஆகிய அந்த இருவரும் போதைப்பொருள் உட்கொண்டு மயங்கியிருப்பதாக முதலில் பொலிசார் நினைத்தனர்.

இந்நிலையில் Rowley பாதுகாப்பு உடை அணிந்த மருத்துவ உதவிக் குழுவினரால் ஆம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றப்படுவதையும் அவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் காணப்படுவதையும் காட்டும் வீடியோ ஒன்று வெளியானது.

அதற்குப்பின் பொலிசார் Dawn Sturgess மற்றும் Charlie Rowley ஆகிய இருவரும் நச்சுத் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதை உறுதி செய்தனர்.

தற்போது குற்றச் சம்பவம் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பதை அறிவதற்காக ஸ்காட்லாண்ட் யார்டும் பாதுகாப்பு அமைச்சகமும் களத்தில் இறங்கியுள்ளன.

Check Also

இளைஞர்களின் மோசமான செயலால் நடு வீதியில் நடந்த அதிர்ச்சி..!

கொழும்பு பிரதான வீதியின் புணானைப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *