Breaking News
Home / சினிமா / மீண்டும் வெளியான ‘தளபதி 62’ போட்டோ… டென்ஷனில் படக்குழு!

மீண்டும் வெளியான ‘தளபதி 62’ போட்டோ… டென்ஷனில் படக்குழு!

சென்னை : விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சென்னையில் ஷூட்டிங் முடித்து, மும்பைக்குச் சென்ற படக்குழு அங்கு சில காட்சிகளை மட்டும் எடுத்துவிட்டு மீண்டும் சென்னை வந்தது.

விஜய்யை வைத்து ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களை இயக்கிய முருகதாஸ், தற்போது விஜய்யை இயக்கி வருகிறார். துப்பாக்கி படத்தில் ராணுவ வீரரைப்பற்றிய கதையை படமாக்கிய முருகதாஸ், கத்தியில் விவசாயிகள் பிரச்னையை படமாக்கினார். ‘விஜய் 62’ படத்திலும் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்னை பேசப்படுகிறதாம்.

விஜய்யின் 62-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Check Also

முதலில் தந்தை, பிறகு மகன்: புகைப்படத்தை வைத்து கண்டுபிடித்த இரசிகர்கள்

நடிகர் விக்ரமின் மகன் துருவ், சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *