Breaking News
Home / சினிமா / முதலில் தந்தை, பிறகு மகன்: புகைப்படத்தை வைத்து கண்டுபிடித்த இரசிகர்கள்

முதலில் தந்தை, பிறகு மகன்: புகைப்படத்தை வைத்து கண்டுபிடித்த இரசிகர்கள்

நடிகர் விக்ரமின் மகன் துருவ், சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

 பாலா இயக்கும் இப்படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் உருவாகிவருகின்றது. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி யார் என்று இதுவரை இரகசியமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று வெளியான புகைப்படத்தினால் இரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.

இப்புகைப்படத்தில் துருவ் தலைனை குனிந்த படி, தலையில் கை வைத்துள்ளார். அருகில் அமர்ந்துள்ள எமி, புன்னகையுடன் காணப்படுகின்றார். இதனால் ‘வர்மா’ படத்தில் எமி தான் ஜோடி என இரசிகர்கள் உறுதிசெய்துள்ளனர்.

‘ஐ’ படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக நடித்த எமி ஜாக்ஸனா, துரவ்கும் ஜோடி என இரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

ஆனால், இதுவரை அவர் தான் ஜோடி என படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. எனினும் இதுகுறித்த அறிவிப்பு மிகவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படத்தின் திரைக்கதைக்காக நலன் குமாரசாமி, தியாகராஜன் குமாரராஜா, ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட மூன்று இயக்குநர்கள் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு வசனங்களை இயக்குநர் ராஜு முருகன் எழுத, இ4 என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரிக்கின்றது. மேலும், இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

Check Also

பிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.! நித்யா அதிர்ச்சி பேட்டி.

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *