Breaking News
Home / இலங்கை / முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கனரக வாகனம் ஒன்றில் தீடீரென தீ

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கனரக வாகனம் ஒன்றில் தீடீரென தீ

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் வீதியில் கனரக வாகனம் ஒன்று தீடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மன்னகன்டல் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றில் தீடிரென தீப்பற்றியுள்ளது.

வாகனத்தின் இணைக்கப்பட்டிருந்த மின்சார தாக்கத்தின் காரணமாக தீப்பிடித்துள்ளது என வாகன சாரதி தெரிவித்துள்ளார்.

தீயை அணைக்கும் முயற்சியில் அந்தப்பகுதி பொதுமக்களும், படையினரும் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Check Also

முள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இராணுவத்தினர் !

முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *