Breaking News
Home / இலங்கை / மைத்திரி, மஹிந்த. ரணில் தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் வெளியிட்ட தகவல்!

மைத்திரி, மஹிந்த. ரணில் தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் வெளியிட்ட தகவல்!

ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களினது சிந்தனைகள் சிங்கள பௌத்த மேலாதிக்க அடிப்படையைக் கொண்டது என குறிப்பிட்டுள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களுக்கெதிரான சிந்தனைகள் அவர்கள் மத்தியில் ஒருமித்தவையாகவே இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இளம் பொறியியலாளர்களின் கூட்டில் உருவாக்கப்பட்ட Tech Centurions அமைப்பின் 3 வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் முதலமைச்சர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் மைத்திரிபால சிறிசேனவாக இருந்தால் என்ன, மஹிந்த ராஜபக்சவாக இருந்தால் என்ன, ரணில் விக்கிரமசிங்க ஆக இருந்தால் என்ன அவர்களின் சிந்தனைகள் எப்போதும் சிங்கள பௌத்த மேலாதிக்க அடிப்படையைக் கொண்ட ஒரு சிந்தனையாகவே அமைந்திருப்பது கண்கூடு.

அவர்களுக்கிடையே அரசியல் போட்டிகள், ஆட்சி மாற்றங்கள், அதிகாரப் பிரயோகங்கள் காணப்படுகின்ற போதும் தமிழ் மக்களுக்கெதிரான சிந்தனைகள் அவர்கள் மத்தியில் ஒருமித்தவையாகவே இருப்பதை நாம் நீண்டகாலமாக உணர்ந்திருக்கின்றோம். ஒரு சாரார் நேரடியாக எமக்கு எதிரானவர்கள் என்றால் மறு சாரார் மறைமுகமாக எமக்கு எதிரானவர்கள் ஆவார். இந்த நிலையில் தமிழ்த் தலைவர்கள் தமது புத்தியையும் விவேகத்தையும் பாவித்து தமது உரிமைகளை எவ்வாறு பெறமுடியும் என்று சிந்தித்து செயலாற்ற வேண்டிய அவசியம் எமக்குண்டு.

அவ்வாறு நாம் இதுவரையில் செயலாற்றியுள்ளதாகத் தெரியவில்லை. இவ்வாறான அரசியல் சூழலில் நாம் தமிழ் மக்களுக்கான உரித்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு எமது மத்திய அரசுடனும் சிங்கள அரசியல் வாதிகளுடனும், சிங்கள மக்களுடனும் உள்நாட்டில் கருத்துப் பரிமாற்றங்களை நடத்த வேண்டும். அதே நேரம் சர்வதேச அரங்கிலும் எமது நிலைகளை எடுத்துக் கூறி அவர்களை எம் சார்பாகச் சிந்திக்க வைப்பதற்கு ஏற்ற வகையில் நாம் எம்மை தயார்ப்படுத்திக் கொள்வது மிக அவசியமாகும். எமது அரசியல் ரீதியான துர்ப்பாக்கிய நிலை எல்லோர் மத்தியிலும் கொண்டு செல்லப்பட வேண்டும். சமாந்திரமாக எமது பொருளாதார நிலைமையினை வலுவடையச் செய்ய வேண்டும்.

ஏனைய துறைகளில் புத்தி கூர்மையாக இருக்கும் தமிழர்கள், தமது இனம் சார்ந்த அரசியல் நடவடிக்கைகளில் விவேகத்துடன் செயற்படுகின்றார்களா என்பது கேள்விக் குறியாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுவாகவே தமிழ் மக்கள் புத்திக் கூர்மை மிக்கவர்கள், கணிதத் துறையில் பாண்டித்தியம் பெற்றவர்கள், எந்த ஒரு காரியத்தையும் மிகவும் விவேகமாக செய்து முடிக்கக் கூடியவர்கள், பொறுமைசாலிகள் என வர்ணிக்கப்படுகின்றார்கள். ஆனால் தமது இனம் சார்ந்த அரசியல் நடவடிக்கைகளில் தமிழர்களின் வகிபாகம் புத்திக்கூர்மை உள்ளதாகவோ விவேகம் மிக்கதாகவோ இல்லாதது கவலைக்கிடமாகின்றது.

எமது தற்போதைய அரசியல் கள நிலவரங்களை உற்று நோக்கினோமாயின் இதன் தாற்பரியம் எம்மால் உணரப்படலாம். 2015ம் ஆண்டில் இலங்கைக்கான புதிய ஜனாதிபதி தெரிவில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி ஏறிய அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றிய பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறு பிள்ளைகளுக்கு இனிப்புக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவது போன்று காலத்துக்குக் காலம் எமக்கு பல்வேறு உறுதிமொழிகளையும், பசப்பு வார்த்தைகளையும் கூறி தமிழ் அரசியல் தலைமைகளை தமது கபட அரசியலில் விழ வைத்து ஆட்சி நடத்தி வந்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதுவித நிரந்தரமான நன்மைகளையும் அவரின் அரசாங்கம் பெற்றுத்தரவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். எமது மக்களின் பூர்வீகக் குடியிருப்பு நிலங்களையும், விவசாயக் காணிகளையும், அவர்களின் உடமைகள் பலவற்றையும் பலாத்காரமாக இராணுவ முன்னெடுப்புக்களின் போது கையகப்படுத்தி மிக நீண்ட காலமாக படையினர் தமது பொறுப்பில் வைத்திருந்து வருகின்றார்கள். தற்போது அக் காணிகளில் ஒரு சில பகுதிகளை மீளக் கையளிக்கின்ற போது இந் நிலங்கள் எல்லாம் ஏதோ சிங்கள மக்களின் பூர்வீகச் சொத்துக்கள் போலவும் அவற்றை தமிழ் மக்களுக்கு தார்மீக அடிப்படையில் தாம் வழங்குவது போலவும் ஒரு மாயை விம்பத்தை அரசாங்கம் உருவாக்க முயல்வது நகைப்புக்குரியது. 60,000 ஏக்கருக்கு மேல் எமது நிலங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. ஒரு சில ஆயிரம் காணிகளே மிகுதி இருக்கின்றன என்று அரசாங்கம் கூறிவருகின்றனர். அவர்கள் கூறுவது தனியார் காணிகள் சம்பந்தமானது. எமக்குரித்தான அரச காணிகள் 60,000 ஏக்கருக்கு மேல் அவர்கள் கைவசம் இருந்து வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

Check Also

லண்டனில் ஆண்களுக்கு உடலை விருந்தாக்கிய பெண் கூறும் காரணம்

லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் இறங்கியதாக மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார். பிரித்தானியாவின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *