Breaking News
Home / இலங்கை / யாழ் சென்ற பிரித்தானிய தமிழ் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸார்

யாழ் சென்ற பிரித்தானிய தமிழ் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸார்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தமிழ் பெண் ஒருவரிடம், ரயில்வே ஊழியர் அநாகரீகமாக நடந்த கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பெரும்பான்மை இனத்தவரான ரயில்வே ஊழியர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ரயில் பாதிக்கப்பட்ட பெண் பிரித்தானிய பிரிஜாவுரிமையை பெற்றுள்ளார். இதன் காரணமாக அவருக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்த இலங்கை வந்த தமிழ் பெண்ணொருவர், நேற்று யாழ்ப்பாணம் சென்றார்.

இதன்போது குறித்த பெண்ணிடம் சிங்கள மொழியில் ஆபாசமாக பேசிய ஊழியர் இனத்துவேச கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவத்திற்கு தொடர்புடைய நபருக்கு எதிராக ஏற்கனவே 3 குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும், தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிக்காக சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Check Also

முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் இன்று நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *