Breaking News
Home / இந்தியா / ரஜினிகாந்த் நல்ல வாய்ப்பை தவற விட்டுள்ளார்.

ரஜினிகாந்த் நல்ல வாய்ப்பை தவற விட்டுள்ளார்.

வருங்கால அரசியல்வாதி ரஜினிகாந்த் , தமிழகத்திற்கு உதவி செய்ய கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை தவற விட்டுள்ளார்.

என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா! என்று பாடி உருகிய ரஜினிகாந்த்துக்கு, அந்த தமிழர்களுக்கு உதவ கிடைத்த அருமையான வாய்ப்பு கை நழுவியுள்ளது.

அரசியலுக்கு வருகிறேன், தனிக்கட்சி தொடங்குகிறேன் என்று கடந்த வருடம் டிசம்பர் 31ல் ஆவேசமாக அறிவித்தார் ரஜினிகாந்த். ஆனால், அறிவித்து ஓராண்டு ஆன பிறகு இதுவரை இரு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. இன்னும் ஒரு படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

அரசியலுக்கு வருவேன், அதுவும் தேர்தல் காலத்தில்தான் வருவேன் என்று சொல்லி வரும் ரஜினிகாந்த், தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளில் கூட குரல் கொடுப்பதில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Check Also

சொத்து மதிப்பை வைத்து அரசியல் நடத்தும் ரஜினி

கர்நாடகாவை பிறப்பிடமாக கொண்ட நடிகர் ரஜினிகாந்த, தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக இருப்பதால் தமிழக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *