Breaking News
Home / பிரபலமானவை / லண்டனில் 8 மணித்தியா முற்றுகை முடிவுக்கு வருமா ? பீதியில் ஊர் மக்கள் உள்ளார்கள்

லண்டனில் 8 மணித்தியா முற்றுகை முடிவுக்கு வருமா ? பீதியில் ஊர் மக்கள் உள்ளார்கள்

பிரித்தானியாவின் ஆக்ஸ்பேட் நகரில் உள்ள வீடு ஒன்றில், பதுங்கி இருந்த ஆயுததாரியை சுற்றிவளைத்துள்ளார்கள் பொலிசார். பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றை அடுத்தே அவர்கள் குறிப்பிட்ட வீட்டை நெருங்கியவேளை. துப்பாக்கிதாரி பொலிசாரை நோக்கி சுட்டுள்ளார். இதனை அடுத்து ஆயுதம் தாங்கிய பொலிசார் அங்கே குவிக்கப்பட்டு . குறித்த வீட்டை பொலிசார் முற்றுகையிட்டு, 8 மணித்தியாலங்கள் ஆகிறது.

வீட்டையும் அங்கே செல்லும் சாலைகளையும் பொலிசார் லாக்டவுன் செய்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இந்த வீட்டில் இருக்கும் நபர் தீவிரவாதியா ? இல்லையேல் பிரித்தானிய பிரஜையா என்பது கேள்விக் குறியாக உள்ள அதேவேளை. பிரித்தானியாவில் லைசன்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது மிகக் கடுமையான குற்றம் ஆகும்.

8 மணித்தியாலமாகும் இந்த முற்றுகை எப்போது நிறைவுக்கு வரும் என்று தெரியவில்லை. துப்பாக்கிதாரி சரணடைய வேண்டும் இல்லையேல் பொலிசார் உள்ளே புகுந்து அவரை சுட்டு கைதுசெய்ய நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Check Also

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் இளைஞக்கு கிடைத்த இரு அதிர்ஷ்டங்கள்!

பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கை தமிழ் இளைஞனுக்கு இருவிதமான அதிர்ஷ்டம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *