Breaking News
Home / பிரித்தானியா / லண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்

லண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்




பிரித்தானியாவின் வட்பேட்டில் நேற்றைய தினம்(11.07.2018) அன்று, உலக கிண்ண உதைபந்தாட்டம் நடைபெற்ற வேளை, 18 வயது தமிழ் இளைஞர் ஒருவர் வீட்டில் வைத்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. சமீபத்தில் தான் குறித்த இளைஞர், பல்கலைக் கழகம் செல்ல ஆரம்பித்ததாகவும்.

உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளில் பிரித்தானியா மற்றும் குரோவோஷியா ஆகிய நாடுகள் மோதிய விளையாட்டை பார்க்க அவர் நண்பி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே இருந்த 16 வயது தமிழ் இளைஞரே இவரை கத்தியால் குத்தியுள்ளார். இவர்களுக்கு இடையே என்ன நடந்தது என்பதனை செய்தியாக வெளியிட வன்னி மீடியா இணையம் விரும்பவில்லை.




இறந்து போன இளைஞர், மற்றும் அவரைக் கொலை செய்த 16 வயது இளைஞர் ஆகியோரது வயதைக் கருதி, இது சம்பந்தமாக மேலதிக தகவல் எதனையும் வன்னி மீடியா இணையம் வெளியிட விரும்பவில்லை.

Check Also

அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..

மத்தியதரைக்கடலில் படகு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 450 அகதிகளில் 50 பேரை ஏற்றுக் கொள்ளத் தயார் என ஜேர்மனி அறிவித்துள்ளது. பொறுப்புகளை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *