Breaking News
Home / இலங்கை / லைக்கா நிறுவனம் இல்லை யென்றால் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை என்ன ?

லைக்கா நிறுவனம் இல்லை யென்றால் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை என்ன ?

லைக்கா மோபைல் என்னும் மாபெரும் நிறுவனம் இன்று இல்லை என்றால், ஈழத்தில் உள்ள தமிழர்களின் நிலை என்ன ஆகும் ? என்பது ஒரு பெரும் கேள்விக் குறிதான். ஈழத் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட லைக்கா மோபைல் நிறுவனம் அடித்தட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, இன்று உலகமே வியந்து பார்க்கும் அளவு தலை சிறந்த ஒரு மோபைல் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு சுபாஸ்கரன் அவர்கள், தான் சம்பாதிக்கும் பணத்தில் பெருந்தொகையை ஈழத்தில் கஷ்டத்தை அனுபவிக்கும் மக்களுக்காக செலவு செய்து வருகிறார்.

“ஞானம்” அறக்கட்டளை ஊடாக போரினால் பாதிக்கபப்ட்ட முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் அவர்கள் மேற்கொண்டு வரும் பல திட்டங்கள். ஈழத் தமிழர்கள் சுயமாக வாழ வழி வகுத்துள்ளது. ஆனால் இந்த வளர்சியை தாங்கிக் கொள்ள முடியாத சில சக்திகள், தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதோடு. ஞானம் அறக்கட்டளை பணிப்பாளர் மற்றும் பாரிய தொண்டுகளை தமிழர்களுக்கு செய்து வரும் , திரு ராஜ் சங்கர் அவர்கள் மீதும் சேறு பூசும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். ஒட்டு மொத்தத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு உதவிகள் கிடைக்க கூடாது என்று எண்ணும், இலங்கை அரசின் அடி வருடிகளே இவ்வாறு பல பொய்யான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஞானம் அறக்கட்டளையானது, வன்னியில் மாணவர்கள் சென்று வர இலவச பேரூந்துகளை கொடுத்துள்ளது. தமிழர்கள் வாழ்வாதரத்தை பெருக்க அவர்களுக்கு பல வேலைத்திட்டங்களை வழங்கி வருகிறது. முதியவர்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வருகிறது. வீடமைப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு பல்லாயிரக் கணக்கான ஈழத் தமிழர்களுக்கு, லைக்கா மோபைல் நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை பல உதவிகளை செய்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்தவும், தமிழர்களை சிங்களவர்களிடம் கை கட்டி நிற்க்க வைக்கவும், சில சக்திகள் முனைந்து வருகிறது. இவர்கள் வெகு விரைவில் அடையாளம் காணப்பட உள்ளார்கள். தமிழர்களுக்கு உதவிகள் சென்று சேர்வதை தடுக்கும் இவர்கள், எவ்வாறு தமிழர்களாக இருக்க முடியும் ?

எனவே அவதூறு பரப்பும் நபர்கள் பற்றி தமிழர்கள் விழிப்பாக இருக்கவேண்டும். தொண்டு நிறுவனங்கள் சுயமாக இயங்கி, தமிழர்களுக்கு உதவ எந்த தடையும் இருக்க கூடாது. இதனை ஒருவ்வொரு ஈழத் தமிழர்களும் உணர்ந்து செயல்படவேண்டும், என்று தமிழ் செயல்பாட்டாளர்கள் லண்டனில் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். மறு வாழ்வு மையம்(லண்டன்), தமிழர் உதவி மையம், மற்றும் தமிழ் தேசிய தொண்டு நிறுவனம் என 3 அமைப்புகளும் ஒன்றாக இணைந்து இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம்.

Check Also

விடுதலைப்புலிகள் மீளெழுச்சி? யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து விஐயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த திட்டமிட்ட குற்றங்களைத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *